Wednesday, September 23, 2015

எங்க ஊரில் மதுக்கடை இல்லாததால் நிம்மதியாய் இருக்கிறது.
                        ம.மு.கண்ணன்.
    நாட்டு மக்களையும் நடந்து வரும் ஆட்சியையும் காக்கும் நடவடிக்கையாகத்தான் தமிழகத்தில் மதுக்கடைகளை திராவிட ஆட்சியாளர;கள் திறந்து வைத்திருக்கிறார;கள் என்று சொல்லப்படுகிறது. அதில் திமுக, அதிமுக என்று வேறுபாடில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் பல்லாயிரக் கணக்கான கோடிகள் நட்டம் என்று கணக்கு காட்டப் பட்டாலும் மதுக்கடைகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் என்பது நட்டத்தை சரி செய்யும் விதமாகவும் இலவசத் திட்டங்களுக்கு ஆகும் செலவாகவும் ஈடுகட்டப் பயன் படுவதாக இருக்கிறது.
    அதனால் மதுக்கடைகள் இல்லாமல் யாரும் ஆட்சி நடத்த முடியாது என்று பொருளாதாரப் புள்ளியியலாளர;களே ஒரு பக்கத்திற்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு அமுல் படுத்துவதற்குத்தான் என்று சொல்லப் பட்டாலும், அதுவே வேறு வழியில்லாமல் அறிவிக்கிறது என்று திமுகவின் மேல் விமரிசனமும் எழுந்துள்ளது.
    இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள மதுக்கடைகளை நீதிமன்ற உத்தரவின்படி அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யு+னிஸ்ட் கட்சியின் சார;பில் போராட்டம் நடத்தியதன் விளைவாக மாவட்ட நிர;வாகம் மூன்று மதுபானக் கடைகளை மூடிவிட்டது. புதுக்கோட்டை நகருக்குள் உள்ள திருக்கோகர;ணம், புதுக்கோட்டை - தஞ்சாவு+ர; சாலையில் 10-கிலோ மீட்டர; தூரத்தில் உள்ள இச்சடி என்ற இடத்தில் உள்ள ஒரு கடை, கிழக்கு கடங்கரைச் சாலையில் கோட்டைப்பட்டினம் என்ற மூன்று இடங்களிலும் உள்ள கடைகளை மாவட்ட நிர;வாகம் மூடியதற்கு இந்திய கம்யு+னிஸ்ட் கட்சியின் தொடர; போராட்டம்தான் காரணம் என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர; செங்கோடன் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் ஊருக்குள் மதுக்கடைகளை எப்போதுமே திறக்க விட்டதில்லை என்று இதே மாவட்டத்திற்குள் இரண்டு ஊராட்சிகள் நெஞ்சை நிமிர;த்திச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
    புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் உள்ள ஊர; பனையப்பட்டி. இப்போது இந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர; மணி. அவர; கூறுகையில் எங்கள் ஊருக்குள் ஆரம்ப காலம் தொட்டே மதுக்கடைகளைத் திறக்கவிட்டதில்லை. இன்றுவரை மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர;கள் மாறியதுண்டு. ஆனால் ஊர; மக்களின் நன்மை கருதி ஊருக்குள் மதுக்கடைகளை இதுவரை திறக்கவிடவில்லை. மக்களின் உணர;வுகளை மதித்து மாவட்ட நிர;வாகமும் கடைதிறக்கவில்லை. நிம்மதியாய் இருக்கிறோம் என்றார;.
    அந்த ஊரைச் சேர;ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பழனியப்பன் என்பவர; கூறுகையில் முன்காலத்தில் ஊருக்கு வெளியே வேறு ஊர; எல்லையில் கொண்டு வந்து விற்பார;கள். அப்புறம் அரசு ஏற்பாடு செய்து ஏலமுறைகள் ஏற்படுத்தி கள்ளுக்கடைகள் வந்தபோதும் ஊர;மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு பாக்கெட் சாராயம், பாட்டில் சாராயம் என்று வந்தபோதும் வெளியு+ர;களைச் சேர;ந்தவர;கள் ஏலம் எடுத்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு ஊருக்குள் வந்து விற்க முயற்சி செய்தபோது ஊர;மக்களே சேர;ந்து விரட்டி விட்டார;கள். அப்புறம் டாஸ்மாக் கடைகள் வந்தபோதும் எந்த இடத்திலும் யாரும் இடம் கொடுக்கவில்லை. எங்கள் ஊருக்குள் கடைகள் வேண்டாம் என்று பொதுமக்களே எதிர;ப்புத் தெரிவித்து விட்டதால் அரசும் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டது.
    இங்கிருப்பவர;கள் மதுபானக் கடையைப் பார;க்க வேண்டும் என்றால்  12-கிலோ மீட்டர; தூரத்தில் உள்ள பெருமாநாடு, அல்லது கொப்பனாபட்டி, அதற்கும் அதிகமாக இருக்கும் திருமயம், அல்லது ஆறு கிலோ மீட்டர; தூரத்தில் இருக்கும் நற்சாந்துப்பட்டிக்குத்தான் செல்லவேண்டும். அதற்கு இடைப் பட்ட இடங்களில் எந்த இடத்திலும் இல்லை என்றார;.   
    அரசுக்கு வருமானம் வருவதற்கு எந்த இடமாக இருந்தால் கிராமம் என்ன நகரம் என்ன? பொதுமக்கள் வந்து குடித்தால் சரி. அவர;கள் இளைஞர;களாக இருந்தால் என்ன? தொழிலாளர;களாக இருந்தால் என்ன? வறுமையில் வாடும் விவசாயக் கூலிகளாக இருந்தால் என்ன? மாதாமாதம் இவ்வளவுக்கு விற்பனையை உயர;த்த வேண்டும் என்று இலக்கு நிர;ணயித்து அதையும் தாண்டி விற்கவேண்டும் என்று விற்பனையாளர;களுக்கு கெடுபிடி விதித்து தெருவெங்கும் மதுக்கடைகளைத் திறந்து வைக்கப் பட்டுள்ளது என்று பொதுவாகச் சொல்லும் அதே நேரத்தில் பனையப்பட்டிக்கு அருகில் இருக்கும் இன்னொரு ஊர; குழிபிறை. நகரத்தார;கள் சமூகம் அதிகளவில் வாழும் இந்த ஊரின் வீடுகள் பெரும்பாலும் செட்டிநாட்டுக் கட்டடங்களின் வடிவமைப்பைக் கொண்டவை. ஊருக்குள் நுழைந்தாலே அதன் பிரமாண்டம் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும். இந்த ஊரில் ஆறாயிரம் குடும்பத்தினர; வசித்து வருகிறார;கள்.
    அந்த ஊரிலும் மதுக்கடை இல்லை. இது பற்றி அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர; மணிமேகலையின் கணவர; பாஸ்கர; கூறுகையில் காலம் காலமாக இந்த ஊருக்குள் மதுக்கடைகளே வந்ததில்லை. கள்ளச்சாராயம் இருந்தபோதுகூட கள்ளச்சாராய வியாபாரிகள் ஊருக்குள் வர அஞ்சுவார;கள். திருட்டுத்தனமாக விற்பவர;கள் கூட அருகில் உள்ள மேலப்பனையு+ர; என்ற கிராம எல்லைக்குள்தான் இருந்து விற்றதாகவும் இந்த ஊருக்குள் வந்தில்லை என்றும் பெரியவர;கள் சொல்லியிருக்கிறார;கள்.
    இந்த ஊரைச் சேர;ந்தவர;கள் நாட்டுக்கோட்டை நகரத்தார;கள் என்பதால் அவர;களுக்குள் ஒரு கட்டுப்பாடு விதித்து விட்டால் அதை யாரும் மீற முடியாது. இந்த ஊரில் கள் விற்பதற்கு ஏலம் எடுத்திருந்த வெளியு+ர;க்காரர; ஒருவர; மேலப்பனையு+ர; எல்லைக்குள் நான்கு கம்புகளை ஊன்றி வைத்து கயிறு கட்டி அதன் மேல் தென்னை ஓலை மட்டைகளைப் போட்டு வைத்து அதன் நிழலில் இருந்து விற்றிருக்கிறார;. அப்போதும் குழிபிறைக்குள் நான் வரவில்லையே என்று சொல்லிக் கொண்டு விற்றிருக்கிறார;. இந்த ஊரைச் சேர;ந்த யாரும் குடிக்கப் போகாததாலும் வழிப்போக்கர;கள் மட்டும்தான் வருகிறார;கள் என்பதாலும் ஊர;மக்களின் எதிர;ப்பால் வருமானம் குறைகிறது என்பதாலும் அவராகவே கம்புகளைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டாராம்.
    மக்களே வேண்டாம் என்று சொன்னபிறகு அரசுக்கு இங்கு என்ன வேலை? அதனால் டாஸ்மாக் கடையும் இல்லை, எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த ஊரைச் சேர;ந்தவர;கள் யாரேனும் வெளியு+ர;களுக்குச் சென்று குடித்து விட்டு வந்தாலும் பிரச்சினைகள் ஏதும் செய்வதில்லை. குடித்தது வெளியில் தெரிந்தால் தன் மானத்தை விட ஊர;மானம் போய் விடும் என்பதால் ஊர; பெயரைக் காப்பாற்றவே யாரும் எந்தப் பிரச்சினைகளும் செய்வதில்லை. இந்த ஊரின் இளைஞர;களின் உதவியோடு ஊருக்குள் பொது இடங்களில் பல்லாயிரக் கணக்கான மரக்கன்றுகளை நடச்செய்து அதற்காகவே கடந்த ஆகஸ்ட் 15-அன்று மாவட்ட ஆட்சியரின் கையால் விருதும் வாங்கியிருக்கிறோம். அதனால் மது இல்லாத கிராமம் என்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார;.
    புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர; புனிதாவிடம் கேட்டபோது தற்போது மூன்று கடைகளை மூடியிருக்கிறோம். இடம் பார;த்துக் கொண்டிருக்கிறோம். இடம் கிடைத்தவுடன் கடை திறந்து விடுவோம். குழிபிறை மற்றும் பனையப்பட்டியில் ஏன் கடை திறக்கவில்லை என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார;.
குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 182-அரசு மதுபானக்கடை பார;கள் உள்ளன. இவற்றிற்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது. ஏலப்படி செப்டம்பர; 1-ஆம் தேதி முதல் பார;கள் திறக்கப்பட வேண்டும். இதுவரை போட்டிபோட்டுக் கொண்டு ஏலம் கேட்பவர;கள் இந்த முறை கேட்கவில்லை. அவ்வாறு 125- பார;கள் ஏலம் எடுக்காததால் 1-ஆம் தேதி முதல் மூடப்பட்டு விட்டது. காரணம் விசாரித்தபோது மதுவிற்கு எதிராக சமீப காலமாக பலரும் கடும் குரல் கொடுத்து வருவதுதானாம்.

இப்பொழுதும் அமைக்கு மந்திரிப்பவர;கள் சில இடங்களில் இருக்கிறார;கள். அவர;களிடம் நம்பிக்கைக்காகச் செல்பவர;களைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. அது அவர;களின் நம்பி;க்கை. ஆனால் அம்மை போட்டிருப்பவர;களுக்கு அலைச்சல்கூட்டி மக்கள் கூடும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வது சரியா என்பதை நோய் வந்தவர;கள்தான் சிந்திக்க வேண்டும் என்றார;.

No comments:

Post a Comment