Wednesday, September 23, 2015

வேண்டாம் விஜயகுமார;. இலவச மிக்சி கிரைண்டர;களை வேண்டாம் என்று வாங்க மறுத்த விவசாயி.
                ம.மு.கண்ணன்.
    புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச மின்விசிறி மிக்சி கிரைண்டர;களை வேண்டாம் என்று வாங்க மறுத்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொத்தமங்கலத்தில் கடந்த 5-ஆம் தேதி தமிழக அரசு வழங்கும் விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர; வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர; ஆரமுதுதேவசேனா ஊராட்சி மன்றத் தலைவர; பாண்டியன், வருவாய் ஆய்வாளர; ஐஸ்வர;யா, திருவரங்குளம் ஒன்றிய சேர;மன் துரைதனசேகரன் உள்ளிட்டோர; கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர;களை வழங்கினார;கள்.
    அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர;ந்த விவசாயி விஜயகுமார; என்பவர; ஒன்றிய சேர;மன் துரைதனசேகரனிடம் மனு ஒன்றைக் கொடுத்தார;. அதில் எனக்கு இலவசப் பொருட்கள் வேண்டாம். இதை வழங்கும் அரசு பொதுமக்களிடம் பல்வேறு வகையில் பணத்தை வசூலித்தும் மதுபானக்கடைகளை வைத்து கொள்ளையடித்தும் இதுபோன்று இலவசங்களை வழங்கி வருகிறது.
    இதுவரை தமிழகத்தில் எல்லா துறைகளிலும் முன்னேறிவிடவில்லை. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவும் இல்லை. முற்றிலும் இலவசங்களாக வழங்க வேண்டிய கல்வி மருத்துவம் போன்றவற்றை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைத்து விட்டு இதுபோன்ற இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது.
    மின்சாரம் முழுமையாகக் கொடுத்தால்தான் இவற்றை இயக்க முடியும். எங்கள் ஊரில் மும்முனை மின்சாரம் மூன்று மணி நேரம் மட்டும்தான் இருக்கிறது. இரு முனை மின்சாரம் சில மணி நேரங்கள்தான். அவை முழுமையாக இருந்தால்தான் விவசாயி முன்னேற முடியும். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு இலவசங்கள் வழங்குவதே ஏமாற்றுவேலைதான். இதை வாங்கித்தான் நான் முன்னேற முடியும் என்பது நடைமுறைக்கு ஆகாது. எனவே எனக்கு இவை வேண்டாம் என்பதோடு இலவசங்களே வேண்டாம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார;. இதைப் பார;த்ததும் அனைவருக்கும் அதிர;ச்சி என்றாலும் யாரும் வெளிக்காட்டிக் கொள்ளமாமல் விட்டு விட்டனர;. மறுநாள் இந்தச் செய்தி பற்றி உள்ளு}ர; மட்டுமல்லாது வெளியு+ர;களுக்கும் தெரிய வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
    இது பற்றி  திருவரங்குளம் சேர;மன் துரைதனசேகரன் கூறுகையில் மனுவை என்னிடம்தான் கொடுத்தார;. நான் சரியாகப் படிக்கவில்லை. ஆனால் மனுக் கொடுத்தவர; சீமான் கட்சியாம். அதனால் நான் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. மனு என்னிடம்தான் இருக்கிறது. இனிமேல்தான் படிக்க வேண்டும் என்றார;.
    தாசில்தார; ஆரமுதுதேவசேனாவிடம் கேட்டபோது மனுவை என்னிடம் கொடுக்கவில்லை. சேர;மனிடம்தான் கொடுத்தார;. அதனால் என்ன எழுதியிருந்தார; என்பதும் தெரியவில்லை. சேர;மனும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. எனக்கு எதுவும் தெரியாது என்றார;.
விவசாயி விஜயகுமார; கூறுகையில் ஒரு தாய் தன் குழந்தைகளை எப்படிக் காக்க வேண்டுமோ அதே போல் ஆட்சிக்கு வருபவர;கள் மக்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும். தமிழக முதல்வர; ஆட்சிக்கு வந்தபோது விரைவில் முழுநேர மின்சாரம் கிடைக்கும் என்றார;. ஆனால் நகர;ப்புறங்களில் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை எங்கள் ஊரில் சில மணி நேரங்கள்கூட மின்சாரம் வருவதில்லை. விவசாயப் பயிர;கள் கருகி வருகின்றன. மக்களுக்குப் போதிய அளவு குடிநீர; வழங்க முடியவில்லை.
அரசுப் பேருந்துகளில் போய்வர முடியவில்லை. போக்குவரத்துக் கழகங்களை மூடிவிடுங்கள் என்று நீதிமன்றம் சொன்னபிறகும் அதைச் சீர;படுத்த அரசு முன்வரவில்லை. இப்போதிருக்கும் நிலையில் இலவச மின்விசிறியும் மிக்சியும் கிரைண்டரும் வழங்கி விட்டால் விவசாயியின் வாழ்க்கை முன்னேறிவிடுமா? விவசாயத்தை முன்னேற நடவடிக்கை எடுக்காமலும் மதுக்கடைகளை மூடாமலும் என்ன இலவசம் கொடுத்தாலும் முன்னேற முடியாது. அரசின் மதுக்கொள்கையால் மக்கள் செத்தொழிந்து கொண்டிருக்கிறார;கள். அவர;களைக் காப்பாற்ற முன்வராத அரசு இலவசப் பொருட்களை வழங்கினால் மட்டும் காப்பாற்றி விட முடியுமா என்ன?
நிலத்தடிநீர; 100-150-அடி ஆழத்தில் இருந்தது இப்போது 800-அடி ஆழத்திற்குச் சென்று விட்டது. மக்களைக் காக்கும் முன் நிலத்தடி நீரைக் காக்க வேண்டும். அதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? குளம் ஏரிகளுக்கு தண்ணீர; வரும் வரத்து வாரிகளையும் தண்ணீர; வரும் வழிகளையும் தனியார; ஆக்கிரமித்ததைக் காட்டிலும் தைலமரக் காடுகள் என்ற பெயரில் வழியை அடைத்து வைத்திருப்பது டிஎன்பிஎல் என்ற நிறுவனம். வரத்து வாரிகளையும் புறம்போக்கு நிலங்களைளும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபர;களிடமிருந்து மீட்பது எப்போது? மின்சாரக் குறைபாட்டால் போதிய அளவுக்கு ஊராட்சிகளில்கூட குடிநீர; வழங்க முடியாத நிலை உள்ளது. அதே போல் குடிநீர; விலைக்கு விற்பதும் தமிழகத்தில்தான் பெரும் தொழிலாக மாறிப்போய் விட்டது. பொது மக்களுக்கு குடிநீர; கிடைக்காத நிலை இருக்கும்போது மதுபான நீர; மட்டும் தாராளமாகக் கிடைக்கும் வகையில் அரசின் கொள்கை இருக்கிறது.
மருத்துவக் கொள்கையின்படி மக்களுக்கு முழுமையான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பதில்லை. அனைத்து மருத்துவமும் தனியாரிடத்தில் போய் விட்டது. அரசு மருத்துவர;கள் அரசு மருத்துவ மனைகளைக் காட்டிலும் அவர;களது சொந்த மருத்துவ மனையில்தான் அதிக நேரம் பணி புரிகிறார;கள். இங்கு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர;கூட இல்லை. அதனால் மருத்துவர;களால் முழுமையான சேவைகளைச் செய்ய முடியவில்லை. இதுபோல் ஒவ்வொரு விசயத்திலும் அரசின் திட்டங்கள் மக்களுக்குப் பயனற்றவையாக இருக்கிறது. மக்களும் வாக்களிக்கும் நேரத்தில் ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார;கள்.
அதிமுக இதைச் செய்கிறது என்று மட்டும் சொல்வதற்கில்லை. திமுகவும் அதையேதான் தொடர;ந்து செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அதிமுக செய்யும் நிர;வாகத் தவறுகளை திமுக தட்டிக் கேட்பதில்லை. காரணம் அதில் பெரும்பாலானவை திமுக செய்தவையாகத்தான் இருக்கும். மேலும் அதிமுக ஆட்சியின் போது பல்வேறு காண்ட்ராக்ட் பணிகளை திமுகவினர; செய்வதும், திமுக ஆட்சியின்போது அதிமுகவினர; செய்வதும் நடைமுறையில் உள்ளது. அவர;களின் பொதுப் பணிகளில் உள்ள குறைகளை இரு கட்சியினரும் மூடி மறைத்து விடுகிறார;கள் அல்லது கண்டு கொள்வதில்லை என்பதில் இரு கட்சியினரும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார;கள்.

அதையெல்லாம் எச்சரிக்கை செய்வதற்கும் அரசுக்கு தவறான வழிகாட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கு விழிப்புணர;வு ஏற்படுத்தவும்தான் எனக்கு வந்த இலவசப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்தேன்.  ஏதோ இன்றைக்கு திடீரென்று நான் திருப்பிக் கொடுக்கும் முடிவுக்கு வரவில்லை ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த திமுக (தமிழக) அரசு வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும் வாங்க மறுத்து மனுக் கொடுத்தேன். அதற்குப் பிறகு நிறையத் தொல்லைகளைக் கொடுத்தார;கள். இப்போதும் இரண்டு நாட்களாக யார;யாரோ போன் செய்து மிரட்டுகிறார;கள். இலவசப் பொருட்கள் எனக்குத் தேவையில்லை என்பது எனது முடிவு. அதனால் மற்றவர; யாருக்கும் தொல்லையில்லை. ஆனால் அதைத் தொல்லை என்று கருதி மிரட்டிக் கொண்டிருக்கிறார;கள் என்றார;.

No comments:

Post a Comment