Thursday, March 28, 2013

pudukaithanthi news

கள்ளிக்காட்டு இதிகாசம் என்பது கவிஞர; வைரமுத்து இயற்றிய ஒரு படைப்பாகும். ஆனாலும் இது அவரது படைப்பு அல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளிக்காட்டிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாகும்.
வித்யா-செந்தில், நவீன்-முத்து, மணி- ரிஷா, சங்கர;-கனிஷ்கா, சரண்-பிரியா, வசந்த்-நதி, தேவி-பாண்டியன், சுரேஷ்-சுந்து (சுந்தரியாக இருக்கலாம் சுருக்கமாக சுந்து), சரளா-செந்தில், பிரின்ஸ்-ரேவதி, பாண்டியன்-உதயா, வெங்கட்-கனி, ராஜா-பானு, பாலா-சத்யா, நிவேதா-பத்து, அபி-வினோத், சோலை-அஞ்சலை, குணா-சங்கீதா, சர;மிளா-அப்துல்லா, சங்கர;-கஸ்தூரி, மேரி-விஜய். இவர;கள் எல்லோரும் யார; என்று கேட்கிறீர;களா? இவர;கள் இந்தியாவின் மறு சுதந்திரத்திற்காகப் போராடப் போகிறவர;களா? தமிழகமே இருண்டு கிடக்கிறது. இந்தியா இளைஞர;களின் கையில்தான் என்று அறிஞர; பெருமக்களும் அரசியல்வாதிகளும் முற்போக்கு சிநதனையாளர;களும் அறிவித்து விட்டார;கள். அதனால் இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்று களத்தில் குதித்து போராடிக் கொண்டிருப்பவர;களா? ஓன்றுமில்லை. இவர;கள்தான் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள கள்ளிமரங்களில் இதிகாசங்கள் எழுதியவர;கள். இவர;கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர;ப்பங்களில் சித்தன்னவாசலுக்கு வந்தவர;கள். ஆனாலும் கவிஞர; வைரமுத்துவைப்போல கவிதை எழுதாவிட்டாலும் காவியம் எழுதாவிட்டாலும் கள்ளி மரங்களில் தங்களது காதலைப் பொறித்து வைத்து விட்டவர;கள்.
இவர;களது காதல் நிறைவேறியதா? இவர;கள் கடந்த காலங்களில் காதலித்தது இப்போது கல்யாணத்தில் முடிந்திருக்கிறதா? காதலித்த காலங்களில் காதில் கூறிக் கொண்ட தமது காதல் நிறைவேறியிருக்கிறதா என்பது எல்லாம் நமக்குத் தெரியாது. இதிகாசங்கள் எழுதியவர;களுக்குத்தான் தெரியும். குறிப்பாக வித்யா செந்தில் ஆகியோரின் காதல் முற்றிலும் வித்தியாசமானது ஆகும். அவர;கள் காதலித்த அல்லது இதிகாசம் எழுதிய நாளை 11.2.2008- என்று கள்ளிமரத்தில் பொறித்து வைத்த அதேபோல் காதல் முறிந்த தேதியையும் 27.12.2008 என்றும் குறிப்பிடத் தவறவில்லை. மிகச் சரியாகக் குறிப்பிட்டு இருக்கிறார;கள். சித்தன்னவாசல் சமணர; படுக்கைக்குச் செல்லும் வழியில் உள்ள எல்லா கள்ளி மரங்களிலும் (அல்ல செடிகளிலும்) பெயர;களை எழுதிப் போட்டிருப்பவர;கள் ஜோடிகள் மட்டுமல்லாது தங்களது பெயர;களை மட்டும் எழுதிப் போட்டிருப்பவர;களும் ஜோடிகளை (இன்சியல்களை)முன்னெழுத்துகளை மட்டும் பொறித்து வைத்திருப்பவர;களும் இருக்கிறார;கள். முன்பு சமணர; படுக்கை உட்பட கற்பாறைகளில் தங்கள் பெயர;களைப் பொறித்து வைத்தவர;கள் புதுகைத்தந்தியின் வேண்டுகோளை ஏற்று சமணர; படுக்கைகளுக்கு தொல்லியல்துறை கதவு போட்டு பு+ட்டியவுடன் அங்கு எழுதிப்போட முடியாமல் கள்ளிச் செடிகளைத் தேர;ந்தெடுத்து பொறித்து வைத்திருக்கிறார;கள். கள்ளிச் செடிகளை காதலர;கள் பெயர;தாங்கும் பெயர;ப் பலகையாக மாற்றியமைக்காக வாழ்க காதலர;கள்!...

pudukaithanthi news

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடந்து வரும் கோயில் திருவிழாக்களால் போலீசார; கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர;.
ஆலங்குடியை அடுத்த நகரம் சுப்பிரமணியர; திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடந்து வருகிறது. வம்பன் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவும் நடந்து வருகிறது. மூன்று நாள் திருவிழாவாக பெருங்காரையடி மீண்ட அய்யனார; கோயில் திருவிழாவும் நடந்து வருகிறது. மேலும் மாசிமாதத்தில் குடமுழுக்கு நடத்திய கோயில்கள் இருபதுக்கும் மேல் உள்ளன. அத்தனை கோயில்களிலும் பு+ஜை புணஸ்காரம், சிறப்பு அலங்காரங்கள், சாமி திருவீதி உலாக்கள், நாடகம், கச்சேரி, கரகாட்டம் என தினமும் வேடிக்கைகளாக இருக்கின்றன. அதனால் பாதுகாப்புக்குச் செல்லும் போலீசார; கடும் அவதிக்குள்ளாகி இருப்பது அவர;களுக்குள் சண்டையிடும் அளவிற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெயர; சொல்ல விரும்பாத சிறப்பு காவல் உதவி ஆய்வாளர; ஒருவர; கூறும்போது ஒரு காலத்தில் போலீசார; என்றால் பொதுமக்கள் மிகவும் பயத்துடன் பார;த்தார;கள். அணுகினார;கள். அதே போல் அரைக்கால் சட்டையும் லத்தியும் தொப்பியும் அணிந்து வரும்போது குற்றவாளிகள் பயந்து ஓடினார;கள். நாகரீகம் கருதி கலைஞர; ஆட்சியில்தான் காவலர;களுக்கு முழுக்கால்சட்டையை சீருடையாக மாற்றினார;. அதனால் கம்பீரம் மேலும் கூடியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார;கள். ஆனால் போலீசார; இப்போது படும்பாடு அரசு ஊழியர;கள் வேறு யாரும் படமாட்டார;கள்.
பங்குனி உத்திரத் திருவிழாவை ஊர;கள்தோறும் பொதுமக்கள் நடத்துகிறார;கள். அது அவர;களது கலாச்சாரம் பண்பாடு என்று ஆகிறது. அவர;கள் நிகழ்ச்சியை நடத்துவது அவர;களது விருப்பமாக உள்ளது. அவர;களது நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புக் கொடுப்பது காவலர;களின் கடமை. ஒரே நேரத்தில் பல இடங்களில் கரகாட்டம் கச்சேரி என நிகழ்ச்சிகள் நடத்தும்போது அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்புக்குச் செல்லும் போலீசார; ஓரிருவர; மட்டுமே போக முடிகிறது.
அடுத்த நாள் காலையில் காவல் நிலையத்துக்குப் பணிக்கு வரும்போது ஓய்வின்றி, உறக்கமின்றி பணி செய்ய வேண்டி உள்ளது. மறுபடியும் கோயில் திருவிழா என்று போகும்போது நிலையப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா பொதுமக்களின் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்று எங்களால் நிர;ணயம் செய்ய முடிவதில்லை. இதில் மேலதிகாரிகளின் தலையீடுகள் வேறு. நிலையப் பணிகளைப் பொறுத்த மட்டிலும் ஆய்வாளரோ உதவி ஆய்வாளரோதான் கையெழுத்துப் போட முடியும். அதே கிரேடில் உள்ள சிறப்பு உதவி ஆய்வாளர;களுக்கு மனுக்களை விசாரிக்கவோ அதில் பணிப் பகிர;வு செய்யவோ மேலதிகாரிகள் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் பொதுமக்களிடமிருந்து வீணான கெட்ட பெயர;தான் ஆகிறது.
சில நேரங்களில் பிரச்சினைகள் என்று வந்து விடும்போது வெறும் ஆயுதப்படைப் போலீசார;போல் காக்கிஉடை அணிந்த மனிதராக மட்டுமே நிற்க வேண்டியிருக்கிறதே தவிர மாதிரிக்கு நின்று கொண்டிருக்கிறோம். காவல் நிலையப் பணிகள் முழுவதும் முடங்கிப்போய் விட்டன. மேலும் திருவிழா நேரங்களில்தான் குற்றச் செயல்களும் அதிகரிக்கும். எந்தக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. நீதி மன்றப் பணிகளுக்குக்கூடச் செல்ல முடியாத நிலையில் வழக்கறிஞர;களை வைத்து வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
அரசின் மற்ற துறைகளில் உள்ளவர;கள் போராடியேனும் அவர;களது உரிமைகளைப் பெற்று விடுவார;கள். ஆனால் போலீஸ்துறையில் உள்ளவர;கள் யாரிடம் போராடுவது? மற்ற துறைகளுக்கு ஒன்றுடன் ஒன்றாக மற்ற பணிகளில் உள்ளவர;கள் கைகொடுப்பார;கள். காவல்துறைக்கு யாரும் கைகொடுக்க மாட்டார;கள். காவல்துறையில் உள்ளவர;களே மேலதிகாரிகளின் பெயருக்கும் புகழுக்கும் கீழே உள்ளவர;கள் உழைப்பார;கள். உழைப்பவர;களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பதால் காலத்தைக் கடத்தினால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதால் ஊணுற்றமின்றி உழைக்கும் காவலர;கள் ஏதும் செய்ய முடியாமல் காவல்துறையின் பணிகள் திருவிழாக்களால் மொத்தமாய் முடங்கிப்போய்க் கிடக்கின்றன என்றார;.

Monday, January 21, 2013

குடமுழுக்கு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் ஆங்காங்கே அம்மைநோய் வந்திருக்கிறது. வெய்யில்காலம் தொடங்கியிருப்பதால் ஆங்காங்கே ஒரு சிலருக்கு வந்திருந்தாலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

இத குறித்து கொத்தமங்கலம் மணிவேல் சேர;வை மூலிகைப்பண்ணை மேலாளர; இயற்கை மருத்துவர; சுமதி கூறுகையில் வெய்யில்காலம் வந்து விட்டால் அம்மைநோய் வருவது சகஜம்தான். அம்மைநோய் முன்காலத்தில் கடுமையாகவும் குணப்படுத்த இயலாததாகவும் இருந்தது. தமிழக அரசும் சுகாதாரத்துறையும் காலத்தே எடுத்த முடிவுகளால் அம்மைத்தடுப்பு ஊசி போட்டு விடுவதால் அம்மைநோய் இல்லாமல் இருப்பதாக கணக்கில் இருக்கிறது.

ஆனாலும் ஆங்காங்கே வந்து கொண்டிருக்கின்றன. அம்மை நோயில் பெரிய அம்மை சிறிய அம்மை, மணல்வாரி என்று சொல்லக்கூடிய அம்மைகள் வரும். சிறுவர;களுக்கு மணல்வாரியும் மற்றவை பெரியவர;களுக்கும் வரும். விதிவிலக்காக சிறுவர;களுக்கும் அம்மைக்கொப்புளங்கள் வந்து விடும். அதற்கு பழங்காலத்தில் இருந்ததுபோல் கவலைப்பட வேண்டியதில்லை.

வலி அதிகமாக இருந்தால் ஊசிபோட்டுக் கொள்வதில் தப்பில்லை. ஆனாலும் வெய்யில் படாமல் இருந்து கொள்ளுதல் நலம். வௌ;ளைத்துணி விரித்து அதில் வேப்பிலைபோட்டு வைத்து அதில் படுக்க வைக்க வேண்டும். குடிப்பதற்கு இளநீர; கொடுக்கலாம். மாலையில் மோரில் வெங்காயம் வெட்டிப்போட்டு வைத்திருந்து காலையில் குடிக்கக் கொடுக்கலாம். பழ வகைகளும் மிருதுவான உணவு மட்டுமே உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.

அம்மைநோய் கண்டிருப்பவர;கள் படுக்க வைக்கப் பட்டிருக்கும் அறையில் சிறிய வெங்காயத்தை இரண்டு பாதியாக வெட்டி ஜன்னல், கதவு சுவரோரம் என பத்திருபது வைத்துவிட வேண்டும். காலையில் வைக்கும் வெங்காயத்தை மாலையில் அகற்றி விட்டு புதிதாக வெட்டிவைக்க வேண்டும். காலையில் வைப்பதை மாலையில் அகற்றிவிட வேண்டும். அவ்வாறு வைப்பதால் அம்மைநோய் கண்டிருப்பவர;கள் உடலில் இருந்து வெளியாகும் வைரஸ்களை வெங்காயம் இழுத்து வைத்துக் கொள்ளும்.

அவ்வாறு வெங்காயம் வைப்பதால் அம்மைநோய் கண்டிருப்பவர;களுக்கு நோயின் தன்மை பாதியாகக் குறைந்து விடும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அம்மை வந்து விட்டால் மற்றவர;களுக்கு வருவதும் சகஜம் என்கிற நிலை மாறி ஒருவரோடு போய் விடும். மற்றவர;கள் யாருக்கும் வராது. அதே போல் அம்மைநோய் கண்டவர;கள் வீட்டுக்கு யாரும் போனால் அவர;களுக்குத் தொற்றி விடும் என்று கருதி யாரும் போக மாட்டார;கள். அதற்காக வீட்டு முகப்பில் வேப்பிலைக் கொத்து செருகி வைத்திருப்பார;கள். அவ்வாறு செருகி இருந்தால் அந்த வீட்டில் அம்மை நோய் கண்டவர;கள் இருக்கிறார;கள் என்று பொருள். வெங்காயம் வெட்டி வைத்து விட்டால் இவ்வாறான எந்தக் கருத்துக்கும் இடமில்லை. வெங்காயத்துக்கு பெரிய அம்மை, சிறிய அம்மை, மணல்வாரி அம்மை உட்பட அனைத்து அம்மையும் ஓடிவிடும்.